Friday, October 26, 2007

கவியரசின் கண்ணன் பாட்டு



புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென் கோடி தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திரு வேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான்
அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்
நாம்படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
நாம்படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)

12 comments:

நிலா said...

டி எம் எஸ் எந்த மேடையில் பாடினாலும் இந்த பாட்டை கட்டாயம் பாடுவதை செண்டிமெண்ட்டாக வைத்திருக்கிறார். இதை அவரே சொல்லி இருக்கிறார்.

அதேபோல் எவ்வளவு கட்டாயப்படுதினாலும் அவர் பாட மறுக்கும் பாட்டு ஒன்றும் இருக்கிறது, அது எந்த பாட்டு தெரியுமா?

நிலா said...

அதை சொன்னது டி எம் எஸ் சா இல்லை MSV யா என்று மறந்து விட்டது

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி நிலா
அது எந்தப் பட்டு சொல்லி விட வேண்டியது தானெ ?

நிலா said...

அந்த பாட்டு "நான் ஒரு ராசி இல்லா ராஜா" அந்த பாட்டு பாடியதில் இருந்து அவருக்கு கஷ்ட காலம் என்று அவர் நம்புகிறார்

cheena (சீனா) said...

அப்படியா நிலா - நன்றி

மங்களூர் சிவா said...

//
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
//
nice song.
thanks for the lyrics.

when I was in Tamilnadu often I used to hear this song somewhere somehow.

here no way. thanks again

மங்களூர் சிவா said...

@NILA
//
அந்த பாட்டு "நான் ஒரு ராசி இல்லா ராஜா" அந்த பாட்டு பாடியதில் இருந்து அவருக்கு கஷ்ட காலம் என்று அவர் நம்புகிறார்
//

that is T.M.Soundarrajan

cheena (சீனா) said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சிவா

வித்யா கலைவாணி said...

cheena (சீனா) ஐயா, வணக்கம். கொஞ்ச நாளாய் பார்க்க முடிவதில்லை. வேலைப்பளுவாக் இருக்கலாம். நல்வரவு.

cheena (சீனா) said...

நன்றி வித்யா - சனி மதியம் முதல் இன்று வியாழன் அதி காலை வரை வெளியூர் சென்றிருந்தேன். கணிணித் தொடர்பு இல்லை.

ஆடுமாடு said...

சீனா நல்ல பாட்டு. ஊர்ல கல்யாண வீட்டுல, கிருஷ்ண ஜெயந்தியப்போலாம் இந்தப் பாட்டு நிச்சயம் உண்டு. கேட்போம். இப்ப உங்களை மாதிரி யாராவது எழுதுனாதான்.

நிலா சொன்னது:
//அந்த பாட்டு "நான் ஒரு ராசி இல்லா ராஜா" அந்த பாட்டு பாடியதில் இருந்து அவருக்கு கஷ்ட காலம் என்று அவர் நம்புகிறார்//
நிஜம்தான். சினிமா செண்டிமெண்டுக்கு அளவே இல்லை. ஆனாலும் டி.எம்.எஸ்க்கு அது நிஜம். அந்தப் பாட்டுக்குப் பிறகு வாய்ப்பு அதிகமா கிடைக்கலை. இதேபோல இப்ப சினிமால நெகட்டிவா தலைப்போ பாடலோ எழுதுறதை சுத்தமா விட்டுட்டாங்க.

cheena (சீனா) said...

நன்றி ஆடுமாடு - வருகைக்கும் கருத்துக்கும். அறம் பாடி குழந்தையை இழந்த கவியரசின் கவிதை:

"அவனைத் தூங்க விடுங்கள்"

என்ன செய்வது ?